315 Posted: April 07, 2022

க.பொ.த (உ/த) தொழில்நுட்ப பிரிவு மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

எமது கல்லூரியின் க.பொ.த (உ/த) தொழில்நுட்ப பிரிவு (2021) மாணவர்களுக்கு தேசிய தொழில் தரச் சான்றிதழ் (NVQ 4) பெற்றுக்கொள்ளுதல் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கானது NAITA நிறுவனத்தினரால் 07.04.2022 அன்று எமது கல்லூரியில் இடம்பெற்றது.

குறித்த கருத்தரங்கானது எமது கல்லூரியின் தொழில்நுட்பப்பிரிவு ஆசிரியர்களான திரு.க.நிஷாந்தன் மற்றும் திரு.உ.திருக்குமரன் ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் NAITA வில் இருந்து வளவாளர்களாக வருகைதந்திருந்த திரு.இ.திருமுருகன், திரு.J.துஷான்சன் ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது.

மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் வகையில் குறித்த கருத்தரங்கை நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும், வளவாளர்களுக்கும் எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் கல்லூரிச் சமூகம் சார்பான நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Translation

Guidance Seminar for GCE (A / L) Technology students

 A guidance seminar on GCE (A / L) Technology (2021) students obtaining National Vocational Qualification Certificate (NVQ 4) for our College was organized by NAITA on 07.04.2022 at our College.

 The seminar was conducted by Mr. E. Thirumurugan and Mr. J. Dushansan, who were resource persons from NAITA under the guidance of Mr. K. Nishanthan and Mr. U. Thirukumaran, Teachers of our College.

 Mr. G. Krishnakumar, Principal of our College, on behalf of the College Community, thanked the teachers and resource persons for organizing the seminar on enriching the future of the students.



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events