871 Posted: July 21, 2022

யா/நெல்லியடி மத்திய கல்லூரியில் STEM Class room கையளிப்பு நிகழ்வு

கொமர்சியல் வங்கியின் 100 ஆண்டு சேவையை நினைவுகூறும் வகையில் சமூக பொறுப்பு செயற்திட்டத்தின் (CSR) ஊடாக எமது கல்லூரிக்கு STEM Class Room ஒன்று போதிய உபகரன வசதிகளுடன் கொமர்சியல் வங்கியினால் அமைத்துத் தரப்பட்டுள்ளது.

குறித்த STEM Class room இனை மாணவர்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு 2022.07.14 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணிக்கு கல்லூரியின் அதிபர் திரு G.கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கொமர்சியல் வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் திரு. இராமச்சந்திரன் சிவஞானம் அவர்களும் சிறப்பு விருந்தினராக கொமர்சியல் வங்கி நெல்லியடி கிளை முகாமையாளர் திருமதி.தபோதினி கஜரூபன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கொமெர்சியல் வங்கியின் இச் செயற்திட்டம் எமது கல்லூரி மாணவர்களின் கற்றல் வசதிகளை அதிகப்படுத்தி ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு உற்சாகத்தையும், நவீன தொழில்நுட்பத்தையும் வழங்கியுள்ளது என குறிப்பிட்ட கல்லூரி முதல்வர் அவர்கள் கொமெர்சியல் வங்கி நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மற்றும் பனியாளர்களுக்கும் அத்துடன் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டு STEM Class Room ஐ திறந்து மாணவர்களிடம் ஒப்படைத்த யாழ் பிராந்திய முகாமையாளருக்கும் மற்றும் கொமர்சியல் வங்கி நெல்லியடி கிளை முகாமையாளருக்கும் கல்லூரிச் சமூகம் சார்பான நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Translation

In commemoration of 100 years of service of Commercial Bank, a STEM Class Room with adequate equipment facilities has been set up in our school by Commercial Bank through Social Responsibility Program (CSR).

The event to dedicate the said STEM Classroom to the students was held on Thursday 2022.07.14 at 8.30 AM under the leadership of Mr. G. Krishnakumar, Principal of the college. Commercial Bank's North Regional Manager Mr. Ramachandran Sivagnanam and Commercial Bank Nelliady Branch Manager Mrs. Thabothini Gajaruban attended as chief guest and special guest.

Our principal mentioned that this project of Commercial Bank has increased the learning facilities of our college students and provided enthusiasm and modern technology to the teaching activities of the teachers. And he expressed his gratitude on behalf of the college community.

 



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events