728 Posted: April 22, 2022

இளம் புத்தாக்குனருக்கான பயிற்சி செயலமர்வு

எமது கல்லூரியில் தரம் 8,9 மற்றும் 10 ஆம் தர மாணவர்களுக்கு மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை கையாளுதல் மற்றும் அதனை பயன்படுத்துதல் தொடர்பில் அறிவை வழங்குதலை நோக்கமாக கொண்டு பயிற்சி செயலமர்வு ஒன்று 22.04.2022 அன்று எமது கல்லூரியில் இடம்பெற்றது.

குறித்த செயலமர்வில் சூரியகலங்களை ஒழுங்கமைத்து சூரியப்படலை அமைத்து அதிலிருந்து மின்குமிழ், மின்விசிறி, வலுப்பொதி போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்களை இயக்குதல் தொடர்பான பயிற்சிகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

எமது கல்லூரியின் முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்களின் தலைமையின் கீழ் எமது கல்லூரியின் தொழில்நுட்பக்கழகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இச் செயலமர்விற்கு வேலும் மயிலும் நிறுவனத்தினர் அனுசரனை வழங்கியிருந்தனர்.

குறித்த செயலமர்வை ஆக்கபூர்வமாகவும், வெற்றிகரமாகவும் நடாத்திய எமது கல்லூரியின் தொழில்நுட்பக் கழகத்தினருக்கும்,ஆசிரியர்கள் திரு.க.நிஷாந்தன்,திரு.உ.திருக்குமரன் மற்றும் அனுசரனை வழங்கிய வேலும் மயிலும் நிறுவனத்தாருக்கும் எமது முதல்வர் அவர்கள் கல்லூரிச் சமூகம் சார்பான நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்.

Translation

Training session for young innovators

 A training session was held on 22.04.2022 at our college with the objective of imparting knowledge on handling and utilizing renewable energy resources to grade 8,9 and 10th grade students in our college.

 During the workshop, trainings were organized on setting up solar panels and operating everyday equipment such as bulbs, fans and power packs with that solar energy.

The workshop was organized by our school’s Technology club under the leadership of Mr. G. Krishnakumar, Principal of our school and was sponsored by Velum Mayilum Foundation.

On behalf of the school Community, our Principal would like to thank the Technology club of our College,teachersMr.K.Nishanthan,Mr.U.thirukumaran and Velum Mylum Foundation for conducting the workshop in a constructive and successful manner.



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events