754 Posted: June 15, 2022

'கற்றல் பூமியிலிருந்து ஒரு கமநிலம்' என்ற தொணிப்பொருளின் கீழ் எமது கல்லூரியில் பயிர்செய்கை ஆரம்பம்

அரசின் 'கற்றல் பூமியிலிருந்து ஒரு கமநிலம்' என்ற தொணிப்பொருளின் அடிப்படையில் "தேசிய மாணவர் பயிர்ச் செய்கைப் புரட்சி" திட்டத்தின் கீழ் பாடசாலைகளில் வீட்டுத்தோட்டங்களை ஸ்தாபிக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைய பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் 15.06.2022 அன்று எமது கல்லூரியில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கௌரவ.செல்வராசா கஜேந்திரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடனும் ஊக்குவிப்புடனும் 'சமகால பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக தற்சார்பு வாழ்வை நோக்கி பயணிப்போம்" என்ற கருப்பொருளின்கீழ் நாற்றுமேடைகள் அமைக்கப்பட்டதுடன் விதைகள் மற்றும் நாற்றுக்கள் வழங்கிவைக்கப்பட்டன.

சமகால மற்றும் எதிர்கால சுபீட்சத்தினை இலக்காகக் கொண்ட குறித்த பயிர்ச்செய்கை திட்டத்தை ஆரம்பித்து வைத்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பங்குபற்றிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் கல்லூரிச் சமூகம் சார்பான நன்றிகளை எமது கல்லூரி முதல்வர் திரு.G.கிருஷ்ணகுமார் அவர்கள் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.

Translation

Beginning of cultivation in our college under the theme 'Agriculture from Learning Land'

Cultivation activities were started in our college on 15.06.2022 under the program 'Establishment of Home Gardens in Schools' under the 'National Student Cultivation Revolution' program under the theme 'Agriculture from Learning Land'.

Nurseries were set up and seeds and seedlings were distributed under the theme 'Let's move towards self-sufficiency to face the contemporary economic crisis with the participation and encouragement of the Hon. Members of Parliament Hon. Gajendrakumar Ponnambalam M.P. and Hon. Selvarajah Kajendren M.P.

On behalf of the College Community, our College Principal Mr. G . Krishnakumar expressed his gratitude to the Members of Parliament, teachers and students who participated in initiating the cultivation program aimed at contemporary and future prosperity.

 



Student Progress Report

Students first term examination result.

Upcoming Events

All Events